எடுத்த அனைத்து காரியங்களிலும் உறுதியாக வெற்றி கிடைக்கும்.எத்துனை குழப்பங்கள் இருந்தாலும் அவையனைத்தும் தீர்ந்து நிம்மதி ஏற்படும். அனைவரின் வாழ்க்கையிலும் ஒளிவிளக்கு சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.
எனது பல்லாண்டுகால ஆராய்ச்சிகளின் வெற்றிகளை என்னை வழி நடத்திச் செல்லும் ஸ்ரீ பைரவர் பாதங்களுக்குச் சமர்பிக்கின்றேன். ஓம் ஸ்ரீ பைரவர் போற்றி, போற்றி!!!
கால் பெருவிரல் ரேகை ஜோதிடம்: மனிதர்கள் ஒவ்வொருவரும் அன்றாடம் நிமிடத்திற்கு நிமிடம் நினைப்பது, அவரும், அவர் சார்ந்தக் குடும்பமும் எவ்விதக் குறைபாடுகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.தாங்கள் ஆண்டுக்கு ஆண்டு வாழ்க்கையில் வளம் பல பெற்று உயர்வான நிலையை அடைய வேண்டும் என்பதே. அதற்கு அடுத்தபடியாகத்தான் தனது சுற்றம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பது. அவ்வாறான மனிதனின் வாழ்க்கை உயர்வுக்கு ஒவ்வொருவரும் ஏதாவது துறையைத் தேர்ந்தெடுத்து தன் உழைப்பைக் கொடுத்து வியர்வையைக் சிந்தி பாடுபட்டு எவ்விதப் பலனும் இல்லாமல் ஓய்ந்து போன நிலைகள் மனித வாழ்வில் ஏராளம். காரணம், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உடலமைப்பு, உடலுழைப்பு, சிந்திக்கும் திறன் அதற்க்கேற்றார் போல் செயல்படும் திறன் இவைகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர் எவரும் வாழ்க்கையில் முன்னேறியதாக வரலாறு இல்லை.
மேற்கண்டவைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து செயல்பாட்டிற்கு வருவதற்கு ஆண்டவனின் அருட்பார்வை கட்டாயம் நமக்குக் கிடைத்தாக வேண்டும். அது கிடைக்காத வரை நம்மால் எதையும் செய்யமுடியாது. காரணம், நாம் அறிவுபூர்வமாகச் சிந்தித்து பெரிய அளவிலான, மக்கள் பயன் பெறுகின்ற திட்டங்கள் தீட்டி அதைச் செயல்படுத்த வேண்டுமானால் "மூலதனம்" எப்படி முக்கியமானதோ, அதைப்போன்று தெய்வ கடாட்சம் மிக மிக முக்கியமானது.
அவ்வாறான ஆண்டவனின் அருட்பார்வை கிடைத்து விட்டால் வாழ்க்கை உயர்வடையும்.அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கும். நாம் அனைவருமே தொழில் தொடங்கும் முன் பூஜை செய்து ஆரம்பிக்கின்றோம். பூஜை செய்து கடவுளை வழிபட்டு தொழில் தொடங்கியோரில் ஒருசிலர் மட்டும் மேன்மை அடைவதும், ஒருசிலர் நஷ்டத்தை அடைந்து, பிறகு அவர்கள் செய்த தொழிலையே விட்டுவிடுவதற்குக் காரணங்கள் என்ன? அதே போல் புதிதாய் வீடு கட்டி தகுந்த முறையில் கிரஹப்பிரவேசம் செய்து குடிபுகுந்த பின் அவ்வீட்டில் வறுமை, நோய், விபத்துக்கள், குழந்தைபாக்கியமில்லாதது மற்றும் கணவன், மனைவி கருத்து ஒற்றுமை இல்லாமல் விவாகரத்துப் பெறுவது அல்லது கட்டிய வீட்டையே விற்கின்ற நிலை போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கான காரணங்கள் என்ன? இவற்றுக்கு நாம் விடை காண வேண்டாமா?
இந்து மதத்தவர்கள் அம்மததிலுள்ள அனைத்து கடவுள்களைக் கும்பிட்டாலும், ஒவ்வொருவரும் தங்களுக்குள் பிடித்தமான ஒரு தெய்வத்தை மட்டும் மிகவும் பிரியமாக பெயர், இராசி, நட்சத்திரங்களின் பேரில் அடிக்கடி அர்ச்சனை செய்து அதன்பின் அனைத்து நற்பலன்களும் இனிக் கிடைத்துவிடும், கஷ்டங்கள் தீர்ந்து விடும் என்று எண்ணி நம்பிக்கையுடன் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் பலன் ஏதும் கிடைக்காது. அவ்வாறு செய்யாமல் தங்கள் உடல் அம்சம் சார்ந்த, தங்களுக்கு ஏற்ற, தங்களுக்கு அருளையும் பொன் பொருளையும் அள்ளித்தருகின்ற கடவுளைக் தெரிந்து கொண்டு, அதனை எந்த நேரத்தில், என்னென்ன பூஜைப்பொருட்களை வைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்ற விபரங்களையும் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு மனிதனின் விதி,அவன் உடல் சார்ந்த தெய்வம், எந்தத் தொழிலை அவர் செய்தால் மேன்மையடையலாம், அதன் மூலம் அவருடைய வாழ்க்கை முன்னேற்றம் பற்றிய பலன்கள் அனைத்தும் அவருடைய கால் பெருவிரல் ரேகையில் மட்டுமே உள்ளது. இது பல்வேறு மனிதனின் கால் பெருவிரல் ரேகைகளைப் பதிவு செய்து ஆராய்ச்சியில் கண்டறிந்த உண்மை.
|