Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
ஜோதிடம்

          கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும்  இந்துக்களைப் போல் பல கடவுள்களை வணங்காவிட்டாலும் கூட, கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளில் தங்கள் பிராத்தனைநேரம்  தவிர, இஸ்லாமியர்கள் மசூதிகளிலும், தர்ஹாக்களிலும் தொழுகை நடத்திய நேரம் தவிர, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் வீட்டிலோ, அல்லது தொழில் செய்யும் இடங்களிலோ தங்கள் இறைவனை சிறிது நேரம் நின்றபடியோ  அல்லது உட்கார்ந்த  நிலையிலோ கொஞ்சநேரம் நினைத்துப் பார்த்தாலே போதும்.

          அவர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அப்படியில்லாமல்  அனைவரும் ஏதாவது ஒரு சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் "இயேசுவே" என்றும், இஸ்லாமியர்கள் " யா அல்லா" என்றும் கூறிக்கொண்டிருப்பார்கள் அதில் பலன் கிடைக்காது அதை விட்டு விட்டு ஒவ்வொருவருக்கும் உரிய நேரம் எது என்பதையும் கூட கால் பெருவிரல் ரேகைக் கணிப்பில் கண்டுபிடித்து அதன்படி  வணங்கினால்தான் பலனுண்டு, அருளும் கிடைக்கும்.

         கால் பெருவிரல் ரேகைகளில் வில்வக்கோடுகள், வாகைக்கோடுகள், நாகக்கோடுகள், சங்குக்கோடுகள், சுரியக்கொடுகள், வருணக்கோடுகள், சக்கரக்கோடுகள், கத்தரிக்கோடுகள், கூர்மக்கோடுகள், அந்திமக்கோடுகள், சந்திரக்கோடுகள், குழிமுகம், கருடமுகம், கோமுகம் என இன்னும் பல்வேறு கோடுகள் பல்வேறு மனிதர்களின் கால் பெருவிரல் ரேகைகளில் மாறி, மாறி அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் கூட ஒரே மனிதரின் கால் பெருவிரல் ரேகையில் அமைந்திருக்கும் வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும்.

          உதாரணமாக ஒருவருடைய கால் பெருவிரல் ரேகையில்  வருணக் கோடுகள்  அமைந்திருக்குமானால்  அவர் அதிகமாக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு  என்றிருப்பார். சதா காலமும் தன் குடும்பம் பற்றியே சிந்திப்பவர். அந்தக் கோடுகளுடன் சுரியக்கோடுகளும் அவருக்கு  அமைந்து  இருந்தால் அவர் எப்போதும் பணத்தில் புரளும் நிலை நாளடைவில் உருவாகும். இதுவும் ஆராய்ச்சியின்  மூலம் கண்ட உண்மை. வாகைக்கோடுகள்  அமையப்பெற்றவர், எல்லோருக்கும் வளைந்து கொடுப்பவர், மரியாதை மிக்கவர். ஒரு குறிக்கோளை மனதில் இரகசியமாக  வைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறத்துடிப்பவர். அவர் எடுக்கும் முயற்சிகளில் சிறு மாற்றம் செய்தால் வளமான வாழ்க்கையைப் பெறுவது நிச்சயம். அவர் செய்ய  வேண்டிய மாற்றம் அவருடைய கால் பெருவிரல் ரேகைகளின் மூலம் கண்டறிய முடியும்.

          கால் பெருவிரல் ரேகையில் குழிமுகம் இருந்தால்  அவருடைய வாழ்க்கை சரிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும். அவரது கால் பெருவிரல் ரேகையின் மூலம் அவர் எந்தத் தெய்வத்தினை எந்தெந்தப் பூஜைப்பொருட்கள் மற்றும் மலர்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் கண்டறிந்து அதன்படி அவருக்கு உரிய நேரத்தில் பக்தி சிரத்தையுடன் மூன்று பௌர்ணமி நாட்களில் கும்பிட்டு வந்தால் அவருடைய வாழ்க்கை ஒளிமமாகும்.

          கலை உலகம் என்கின்ற நடன, நாட்டியம், சங்கீதம், சினிமா சார்ந்த  துறைகளில் உள்ளோர்களுக்கு பெண்களாக இருந்தால், கால் பெருவிரல் ரேகை கலச முகம் பெற்று வில்வக்கோடுகள் அல்லது சுரியக்கோடுகள் பெற்றிருந்தால் புகழுச்சிக்குச் செல்வர். ஆண்களாக இருந்தால், கால் பெருவிரல் ரேகை கோமுகம் பெற்று  சந்திரக்கோடுகள்அமைந்திருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் செல்வச்செழிப்புடன் பெரும் புகழ் பெறுவர்.

          ஒருவரின் கால் பெருவிரல் ரேகையில் சந்திரக்கோடுகள் இருந்தால், அவர் நல்ல அறிவாளியாக இருப்பார். அந்தக் கோடுகளுடன் சக்கரக்கோடுகள் இருந்தால் அவர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்வர்.

          கால் பெருவிரலில் உள்ள ஒரு சில கோடுகளும், ஒரு சில முகங்களும்  ஒரு சிலருடைய நட்சத்திரங்களுக்கும், இராசிகளுக்கும், நன்மையையும், தீமைகளையும் கொடுக்ககூடியது.

           உதாரணமாக  எடுத்துக் கொண்டால் " பரணி " நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என ஆருடம் சொல்வார்கள். நாட்டில் " பரணி " நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல லட்சம்  பேர் இருந்தும் " தரணி " ஆள முடியவில்லை, அதற்கான காரணம் என்ன? அவர்களுடைய கால் பெருவிரல் ரேகையில் கஜமுகமும், வாகைக் கோடுகளும்,அமையாமல்  இருப்பது தான் முதற்காரணம்.

  3 of 4    
 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?28.11.2020 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?28.11.2020 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?27.11.2020 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?27.11.2020 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?26.11.2020 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?26.11.2020 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?25.11.2020 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?25.11.2020 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?24.11.2020 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?24.11.2020 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?23.11.2020 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?23.11.2020 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?21.11.2020 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?21.11.2020 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?20.11.2020 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?20.11.2020 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?19.11.2020 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?19.11.2020 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி?18.11.2020 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி?18.11.2020 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Daily Pooja
Daily Pooja
மேலும் ...
வீடியோ படங்கள்
17.11.20
17.11.20
4.11.20
72.10.20
24.10.20
24.10.20
மேலும் ...