யோகா என்பது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலையாகும். மனிதன் தானும் தன்னைச் சுற்றிலும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்க தன உடல், மனம், ஆன்ம மூன்றினையும் ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்பது பழங்கால யோகிகளின் நம்பிக்கையாக இருந்தது. இந்த மூன்றினையும் ஒருநிலைப்படுத்த ஒருவர் தனது செயல், உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்றினையும் சமநிலையினைப் தவறுவதற்கு உடற்பயிற்ச்சி, தியானம் என முக்கியமான வழிகளை செயல்படுத்தினர் யோகாவில் மனிதனின் வளர்ச்சிக்கும், செயலுக்கும் அடிப்படை உடல் தான் என்பதால் உடல் நலத்திற்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்கபடுகிறது.
உயிரின் அடிப்படையே சுவாசிப்பது என்பதால் சுவாசித்தலை நெறிபடுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. யோகாவின் மூலம் மாணவர்கள் மூச்சினை கூட்டுக்குள் கொண்டுவரும் பயிற்சி பெறுகின்றனர். அதன் மூலம் தங்கள் மனதை தியானம் என்ற அடுத்த நிலைக்கு தயார் படுத்திக் கொள்கின்றனர்.


யோகா என்பதன் பொருள் உடல் மற்றும் மனதின் சங்கமம் என்பதே ஆகும். ஆரோக்கிய வாழ்விற்கு இது மிக எளிதான மற்றும் பயனுள்ள வழியாகும் அமைதியான மனதைப் பெறுவதற்கும் உடலின் நச்சுக்களை நீக்குவதற்கும் இது உதவுகின்றது. மூச்சின் உதவியால் ஒருவர் தனது உடலின் பல் வேறு பாகங்களுக்குக் கவனத்தை எடுத்துச் செல்லும் வகையில் யோகாசனங்கள் பயிற்சி செய்யப் படுகின்றன. ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து உறுப்புக்களின் ஆரோக்கியம் மேம்படச் செய்கின்றது.
மனம் அழுத்தமின்றி தளர்ந்திருக்கும் போது உடலால் எளிதாக வளர்ச்சிக்குரிய ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியும்.
சில யோகா தோற்றப் பாங்குகளை நாம் இப்போது காணாலாம், வாருங்கள்
1. புஜங்காசனா:
பாம்பு போன்ற இந்தத் தோற்றப் பாங்கு,தோள்கள், மார்பு, மற்றும் அடி வயிற்றுத் தசைகளை நீட்டுகின்றது. மேலானத் தோற்றப் பாங்கின் மூலம் உயரத்தைக் கூட்டுகின்றது.
2. தடாசனா :
முதுகெலும்பினை நீட்டி நேராக்க மிகச் சிறந்த ஆசனம் இது.உயரத்தையும் கூட்டுகின்றது.
3. நடராஜனாசனா :
இது நுரையீரல்கள், மார்பு ஆகியவற்றை நீட்டுவதுடன், பிட்டம், கால்கள், மணிக்கட்டுகள், கைகள் மற்றும் முதுகு ஆகியவற்றின் தசைகளையும் பலப் படுத்துகின்றது.
4. சூரிய நமஸ்காரம்:
யோகத் தோற்றப் பாங்குகள் மீழ் சுற்றான முறையில் செய்யப் படும் சூரிய நமஸ்காரம், மூட்டுகள் தசைகள் ஆகியவற்றைக் குறைந்த காலத்தில் தளர்த்துகின்றது. அடிவயிற்று உறுப்புக்கள் மாறி மாறி நீட்டி, சுருக்கப் படுவதால்,அவ்வுறுப்புக்களின் முறையான செயல்பாடு உறுதி செய்யப் படுகின்றது. மாறி மாறி முன்னும் பின்னும் குனிந்து நிமிரும் இந்தப்பயிற்சியால் ம |