சங்கத்தின் நோக்கங்கள் :
அனாதை மற்றும் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு காப்பகம் அமைத்தல், கல்வி வசதி அளித்தால், ஆசிரமம் அமைத்தல், எந்த வித ஜாதி, மதம், இனம், வேறுபாடு இல்லாமல் உதவிக் கரம் புரிதல், மனிதாபிமான உதவிகள் செய்தல்.
ஆதரவற்ற மற்றும் ஏழை முதியோருக்கு காப்பகம் அமைத்தல், மருத்துவ உதவி புரிதல், பாதுகாப்பு வழங்குதல்.
ஊனமுற்ற மற்றும் ஏழைக் குழந்தைகளுக்குக் காப்பகம் அமைத்தல், கல்வி வசதி மற்றும் மருத்துவ வசதி வழங்குதல்.
அனைத்து வகையான கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரி உட்பட ஆரம்பித்து நடத்துவது.
செய்தத் தாள்கள், மாத இதழ்கள் மற்றும் பல்வேறு வகையான நூல்கள் வெளியிடுதல், பதிப்பகம் நடத்துவது.
சங்கத்தின் நோக்கங்களுக்கு உதவி கோரி நன்கொடை பெறுதல், ஸ்காலர்ஷிப் விண்ணப்பம் செய்வது மற்றும் அனைத்து அரசு சாரா உதவிகளும் பெறுவதற்கு ஏற்பாடு செய்தல்.
குழந்தைகளிடையே பரஸ்பர அன்பு மற்றும் அரவணைப்பை வளர்த்து மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தல்.
மருத்துவமனை அமைப்பது, சுகாதாரமயம் அமைப்பது.
அனாதை மற்றும் ஏழைக் குழந்தைகளின் வளர்சிக்காக மேலும் மையங்களை உருவாக்குவது, எடுத்துக் கொள்வது, பராமரிப்பது.
சங்கத்தின் நோக்கங்களுக்காக அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் வாங்குதல், உருவாக்குதல், மேலும் காப்பகம் அமைத்தல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைத்தல், கட்டிடங்கள் நிறுவுதல், பராமரித்து வருவது.
பொது நல மற்றும்http://www.bairavafoundation.org/images/pagebrk.gif தருமா அறக்கட்டளை அல்லது சங்கங்களுக்கு நன்கொடை வழங்குவது அல்லது உதவி செய்வது.
ஸ்காலர்ஷிப் மற்றும் இதர பரிசுகள் வழங்குவது.
கிராம மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்துவது, ஏற்றுக் கொள்வது. |