ஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் தொடக்கம் முதல் ஏழை எளியவர்,அநாதை குழந்தைகள் மற்றும் HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார்.
HIV பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமுதாயத்தால் மிகவும் ஒதுக்கப்படுகின்றனர்.அவர்களால் பள்ளி படிப்பு விளையாட்டு என சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை.சில HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தன் பெற்றோரின் இறப்பிற்கு பின்னர் அவர்கள் தன் உறவினர்களால் கூட ஏற்றுக்கொள்ளபடாமல் தனித்து அனாதையாக விடப்படுகின்றனர்.இதை எல்லாம் எதிர்க்கும் வகையில் இவர்களுக்காகவே நான் வாழப்போகிறேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு அவர்களுக்ககாக ஒரு மடத்தை நிறுவி அவர்களுக்ககாகவே சேவை செய்து கொண்டுவருகிறார். HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி,மருத்துவம்,வீடு,உணவு,பொழுதுபோக்கு என்று எல்லா வகையிலும் ஒரு தாயைப் போல இவர் கவணித்து வருகிறார்.
இவரின் இந்த சிறந்த சேவைக்காக நம்மால் முடிந்த நிதியுதவியை செய்து அந்த இறைவனின் திருவடியை சேர ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வோம். |