ஸ்ரீ பைரவா அறக்கட்டளை அனைவரையும் ஸ்ரீ பைரவர்கோவில் திருப்பணிகளில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறது. இந்த அறகட்டளை 2004-ம் ஆண்டு ஸ்ரீ பைரவரின் நல்லாசியுடன் தொடங்கபட்டது. இவ்வறக்கட்டளையின் முக்கிய குறிக்கோள் ஸ்ரீ பைரவருக்கு பாரம்பரியமிக்க ஒரு ஆலயத்தை நிர்மாணித்து அவ்விடத்தில் ஸ்ரீ பைரவரின் பக்தர்கள் வழிபாட்டுத்தளமாக பயன்படுத்த ஆலயத்தை நிர்வகித்தலும் ஆகும்.
இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டதின் நோக்கம் பாரம்பரியமிக்க பைரவர் கோவில் நிர்மாணித்தல் மற்றும் இந்த அறக்கட்டளை அனாதை மற்றும் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு காப்பகம் அமைத்தல், கல்வி வசதி அளித்தால், ஆசிரமம் அமைத்தல், எந்த வித ஜாதி, மதம், இனம் வேறுபாடு இல்லாமல் உதவிக் கரம் புரிதல், மனிதாபிமான உதவிகள் செய்தல் ஆகிய உயர்ந்த நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது.
ஸ்ரீ பைரவர்:
எல்லா சிவன் கோவில்களிலும் விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி,அம்பாள் சன்னதி இருக்கும். அதே போன்று நவக்கிரகஹ சன்னதியும் காணப்படும்.இன்னொரு முக்கியமாக சன்னதியாக விளங்குவது பைரவர் சன்னதியாகும். அதுவும் சற்று ஒதுக்குபுறமாக தனியாக உள்ளடங்கியே பெரும்பாலான கோவில்களில் காணப்படும்.மேலும் அந்தக் கோவில்களில் காவல் தெய்வமாக விளங்குவதே ஸ்ரீ பைரவர் தான்.
ஆமாம் யார் இந்த பைரவர்? இவர் ஏன் காவல் தெய்வமாக வழிபடுகிறார்? சங்க காலத்திலோ, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களிலோ ஏன் இவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுவதில்லை. இவர் தம் வழிபாடு எப்பொழுது நம் நாட்டில் காலுன்றியது என்பது பற்றி இனி பார்க்கலாம்.
அநேகமாக இந்த பைரவ வழிபாடு முதன் முதலில் வட இந்தியாவில் தோன்றிப் பின்னரே இங்கு பரவியிருக்க வேண்டும்.(வாதாபியிலிருந்து கணபதி வந்தது போல). அதுவும் குறிப்பான ஆதி சங்கரரின் அவதாரதிற்குப் பின்னரே இந்த பைரவ வழிபாடு ஏற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. அவர் தாம் முதன் முதலில் வழிபாடு முறைகளைப் பிரித்து ஷண்மத ஸ்தாபனத்தை உருவாக்கியவர். அவற்றுள் ஒன்றான சாக்த வழிபாட்டில் உள்ளடக்கியுள்ளது தான் ஸ்ரீ பைரவ வழிபாடாகும். பைரவர் தம் பெருமையைப் புகழ்ந்து கால பைரவாஷ்டகத்தையும் அவர் பாடியுள்ளார். வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் பைரவர் பற்றிய குறிப்புகள் உள்ளனவா என்பது ஆராய்ச்சிக்குரியது.
பின்னரே தமிழ்நாட்டில் இவ்வகை வழிபாடு காலூன்றியிருக்க வேண்டும். அதுவும் காபாலிகர்கள் வட இந்தியாவிலிருந்து இங்கு வந்தேறிய பின்னரே தொடங்கியிருக்க வேண்டும். பெரும்பாலும் காபாலிகர்கள்,நிர்வாணமாக திரிந்தவர்கள். கையில் சூலத்தை ஏந்தியவர்கள் , பைரவரும் திகம்பரம், கையில் சூலாயுதத்தினை உடையவர்கள் முதலில் இரகசிய வழிபாடாக குகை போன்றவற்றில் வலிபடபட்டுப் பின்னர் கோவில்களில் வழிபாடு தொடங்கியிருக்க வேண்டும். வட இந்தியாவில் காசியில் கால பைரவர் சன்னதி உள்ளது.இங்கு வந்து சென்று வழிபட்டு கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டால் திருஷ்டி தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
பைரவர் சிவனின் ஒரு அவதாரம் என்ற கருத்து உள்ளது. மகன்மை முறை உடையவர் என்ற கருத்தை கிருபானந்த வாரியார் கூட ஒரு சொற்பொழிவில் கூறியிருக்கிறார். சிவனின் சூலத்திலிருந்து தோன்றியவர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் கந்தபுராணம், காசி புராணம், கடம்பவனப் புராணம், போன்ற பிற்காலத்தில் தோன்றிய புராண நூல்களிலோ தான் பைரவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எனவே, இதிலிருந்து பொதுவாக பைரவர் வழிபாடு என்பது பிற்காலத்தில் தான் தமிழ்நாட்டில் வேரூன்றியிருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வர வேண்டியுள்ளது.
|