முதல் பைரவர்:
பைரவ மூர்த்திகளில் மொத்தம் 108 வகைகள் உள்ளதாக கூறப்படுகின்றது. அவற்றில் முதன்மையானதும், மூலமானதாகவும் விளங்குவது ஆதி பைரவராகும்.
இவர் எழுந்தருளியுள்ள தலம் திருப்பத்தூர் திருத்தளி நாஹ்டார் ஆலயம் ஆகும். இத்தலம் காரைக்குடி, திருப்பத்தூர் மார்க்கத்தில் பிள்ளையார்பட்டி,குன்றைக்குடிக்கு வெகு அருகே உள்ளது. இத்தலம் பல சிறப்புகள் வாய்ந்த தலமாகும். இத்தலத்தின் ஒரு புறத்தில் தனிச் சன்னதியில் இந்த பைரவர் காணப்படுகிறார்.
இவர் சிறப்புகள்
உலகில் தோன்றி முதல் பைரவர் இவர்தான் என இந்த ஆலயக் குறிப்பு கூறுகின்றது. அதனால் இவர் ஆதி பைரவர் என அழைக்கபடுகின்றார்.பொதுவாக பைரவர், பெரும்பாலான இடங்களில் கையில் சூலத்துடன், நாய் வாகனத்துடன் நின்ற திருகோலத்தில் காட்சி அளிப்பதே ஐதீகம். ஆனால் இங்கு பைரவர் அமர்ந்த நிலையில், மோக நிஷ்டையில் காணப்படுகிறார்.அதனால் மோக பைரவர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு.அவதாரம்செய்ததாக இத் திருக்கோயில் குறிப்பு கூறுகின்றது. சஷ்டி, அஷ்டமி போன்ற நாட்களில் இவருக்கு ஆராதனை அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யபடுகின்றது. இவற்றில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து வழிபாடு செய்து வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல் போன்ற தொல்லைகள்,வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்சனைகள் நீங்குவதாக நம்பிக்கை.
இந்த பைரவர் மிக உக்ரமானவர்.பொதுவாகப் பலரும் இங்கு தனியாக சென்று வழிபடவே அஞ்சும் அளவிற்கு மிக உக்ரமானவராக ஒரு காலத்தில் விளங்கினாராம். காஞ்சி காமாட்சி போல இப்பொழுதும் பலர் வழிபாடு முடித்து பைரவர் நாம் வாழும் இல்லத்திற்கு வருடம் ஒருமுறை பொங்கலுக்கு வெள்ளை அடித்து சுத்தம் செய்து பாதுகாத்து வருகிறோம். அது போல இறைவன் வாழும் இடமாகிய ஆலயம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுபித்து சாந்தி செய்து கும்பாபிஷேகம் செய்வது வழக்கமாகும். புதிதாக கட்டப்பட்ட கோயிலுக்கு குடமுழுக்கு செய்வது என்பது அனாவர்த்தனம் என்றும், நீண்ட காலமாக பூஜை செய்யப்படாமல் சீர் குலைந்து இருந்தால் அதனை செப்பிவட்டு நிகழ்த்தபடுவதற்கு குடமுழுக்கு ஆவர்த்தனம் என்றும், ஆலயம் முழுமையாக சிதைந்தோ, பிளவு படவோ, அஷ்டபந்தனம் சிதைந்து இருந்தாலோ பாலாலயம் செய்து எல்லாவற்றையும் சரி செய்து குடமுழுக்கு செய்வது புனராவர்த்தனம் என்றும் கூறுவது மரபு.ஆகம சாஷ்திரப்படியும், ஆலயத்தின் முறைப்படியும் வெகுநாட்களாக பூஜை நடைபெறாவிடில் சிவபெருமான் லிங்கத்தை விட்டு விமானத்திற்கு வந்து மூன்று வருடங்கள் வரையிலும் யாவருக்கும் அருள் பாலித்து கொண்டிருப்பதாகவும் 12 வருடத்திற்கு தளவிருட்சத்தில் இருந்து நீங்கி சூரிய மண்டலத்திலிருந்து அருள் பாலிப்பதாகவும் ஐதிகம். ஆகவே, இறைவனை நம்முடனேயே வைத்திருக்க ஆலய கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாது செய்யப்படவேண்டும்.
|