மாபெரும் வெற்றி அடைந்த ஒவ்வொரு தன்னடக்கம் உள்ள மனிதனும் சொல்லும் முதல் சொல் என்னை இந்த நிலைக்கு உயர்த்திய கடவுளுக்கு நன்றி! என்றுதான். எனவே நாம் அனைவருக்கும் மனிதனை மீறிய சக்தி உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவே ஜோதிடம் என்பதும் உண்மையாகிறது.
ஒருவரின் பூர்வ ஜென்மம், கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம், அவரின் பழக்க வழக்கங்கள், அவருக்கு சாதகமான தொழில் எது, குடும்ப வாழ்க்கை எப்படி, மனைவி எப்படி அமைவார், வாழ்வில் வெற்றிகள் எப்போது தேடி வரும். அவர் கடந்து வந்த துன்பங்கள் என்ன? எதிர்நோக்கி உள்ள துன்பங்கள் என்ன என்பதை வலது கால் பெருவிரலில் உள்ள ரேகை மூலம் துல்லியமாக கணிக்க முடியும். சுமார் 6 வருடங்கள் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு இறைவன் பைரவன் அருளால் கால் விரல் ரேகையின் மகத்துவத்தை அறிந்து உலகுக்கு எடுத்துக் கூறிவருகிறேன்.
இறைவனின் படைப்பில் ரேகைகள் ஓர் வரப்பிரசாதமாகும். ஆயுள் ரேகை, இருதய ரேகை, புத்தி ரேகை, மனிதர்களுக்கு ஏற்படும் விபத்துகள், தானாகவே தேடிவரும் விபத்துகள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கால் பெருவிரல் ரேகையில் கணிக்க முடியும். குறிப்பாக, செய்து வருகின்ற தொழிலில் அல்லது புதிதாக தொடங்க உள்ள தொழிலில் முன்னேற்றம் அடைந்து வெற்றி பெற்று சாதனை படைக்க முடியுமா? முடியாதா? பேர் வாங்க முடியுமா? முடியாதா? சம்பாதிக்க முடியுமா? முடியாதா? என்பதையும், அரசியலில் ஈடுபடுகிறவர்கள் அவரவர் சார்ந்த கட்சிகளில் நிலைத்து நின்று நல்ல பதவிகளைப் பெற முடியுமா? முடியாதா? அவ்வாறு முடியாமல் போனால் என்ன செய்து அப்பதவிகளை அடைய முடியும்? அவரவர் கால் விரல் ரேகையின் நியமப்படி என்ன மாற்றத்தைச் செய்தால், அரசியலில், தொழிலில் நல்ல முன்னேற்றங்களையும், வாய்ப்புகளையும் பெறலாம்?
காக்கும் கடவுளாக பைரவரின் அருளால் நான் கூறும் ஜோதிடத்தால் பயன் அடைந்தவர்கள் இன்று தமிழகம் முழுவதும் பரவியுள்ளனர். சினிமா துறையில் உள்ள பிரபலங்கள், சின்னத் திரையில் மின்னும் நட்சத்திரங்கள் பலரும் அவ்வப்போது ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு வந்து விஜய் சுவாமிஜியைச் சந்தித்து தங்கள் எதிர்காலம் குறித்து அறிந்து செல்கின்றனர்.
பைரவர் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் சேவைகளும் செய்து ஏராளமான ஆன்மீகப் பணிகளும் சமூக சேவைகளும் செய்து வரும் விஜய் சுவாமிஜி அவல் பூந்துறையில் மிக பிரமாண்டமான பைரவர் கோயில் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறார்.
|