ஸ்ரீ பைரவா பவுண்டேசனின் நிறுவனர்,விஜய் சுவாமிஜி. காலின் பெருவிரல் ஜோதிட நிபுணர்,23.04.1979 அன்று திரு.பொன்னுசாமி மற்றும் திருமதி.பாப்பாத்தி அவர்களின் முதல் புதல்வன் விஜய் சுவாமிஜி. அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே பைரவரின் அருள் உள்ளது. உலகிலேயே முதல் முறையாக ஒருவரின் வலது காலின் பெருவிரலில் உள்ள ரேகைக் கொண்டு அவரின் வாழ்வில் அத்தனை விஷயங்களையும் தெளிவாக விளக்குகிறார்.
ஜோதிடர் விஜய் சுவாமிஜி கால் பெருவிரல் ரேகை குறித்து அவர் கூறியதாவது ..
ஒருவரின் பூர்வ ஜென்மம் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம், அவரின் பழக்க வழக்கங்கள், அவருக்கு சாதகமான தொழில் எது, குடும்ப வாழ்க்கை எப்படி, மனைவி எப்படி அமைவார், வாழ்வில் வெற்றிகள் எப்படி தேடி வரும். சுமார் 6 வருடங்கள் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு இறைவன் பைரவன் அருளால் கால் விரல் ரேகையின் மகத்துவத்தை அறிந்து உலகுக்கு எடுத்துக் கூறிவருகிறேன்.
இறைவன் அருளால் அனைத்துக் காரியங்களும் சிறப்பாக நடைபெறுகிறது என்பதை இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அறிந்த ஒன்று. நான் ஏற்கனவே இதற்கு முந்தைய நாளிதழ்களிலும், மாத இதழ்களிலும் கால் பெருவிரல் ரேகையின் அமைப்பில் சாதாரண மனிதர்கள் மற்றும் பெண்களையும், மாமனிதர்களாகவும், மாமனிகளாகவும் ஆக்குவதற்கான சிறப்பு அம்சங்கள் நிறைய அமைந்துள்ளதைக் கூறியுள்ளேன். நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவைகளைப் போன்ற கோடுகள் அமையப்பெற்றவர்கள் பல்வேறு வகைகளில் நன்மைகளையும், தீமைகளையும் அடைவார்கள். கால் பெருவிரல் ரேகை மட்டுமே மனிதனின் அரும்பெரும் சக்திகளை வெளிக்கொணர்ந்து அவர்கள் வாழ்க்கையில் வெற்றிகளைக் குறிக்கிறது.
நாட்டினை வழி நடத்திச் செல்லும் நபர்கள் பொது மனிதர்களோ அல்லது தனி மனிதரோ அல்ல.ஏதாவது ஒரு குழுவாக அரசியல் கட்சி சார்ந்தவர்கள் தனித்தோ அல்லது பல கட்சிகள் சார்ந்த கூட்டணியாகவோ ஆட்சி அமைத்து எந்த ஒரு நாட்டினையும் ஆள்கிறார்கள். அரசியலில் ஈடுபாடு மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை மனம் சிந்தித்து முடிவு எடுத்தாலும், அவர்கள் தனித்தோ அல்லது கூட்டணியாகவோ ஆட்சி அமைக்க மக்கள் மத்தியில் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பதும் தேர்தலில் வெற்றி பெற்றபின் சட்டசபை, பாராளுமன்றம் போன்றவற்றில் பணியாற்ற கொண்டு போய்ச் சேர்ப்பதும் அவர்களுடைய கால்களே. நம் உடலைச் சுமந்து செல்வதோடல்லாமல், நம் உடலுக்கு முன்பாக எடுத்து வைக்கப்படுவது கால்களே. அந்தக் காலிலும் கால் கட்டை விரல் முதலில் நிலத்தில் பதிவாகிறது. இவ்வாறு பதிக்கப்படும் கட்டை விரலின் ரேகைகள் நன்றாக அமைந்திருந்ததால் அவர்கள் சென்று வகிக்கின்ற பதவிகளிலும் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் சிறந்து விளங்கும் . பதவிகளில் தொடர்ந்து நீடிக்கவும் வகை செய்கிறது. ரேகை அமைப்பு பாதகமாக இருக்கின்ற காரணத்தால் தான் அவர்கள் வகிக்கின்ற பதவியில் இறக்கம் அல்லது பதவி பறிபோகின்ற நிலை ஏற்படுகின்றது. அதனை நீக்கமற தெளிவுபடுத்துவது கால் பெருவிரல் ரேகை.இதே போன்று பஞ்சாயத்துப்பதவிகள், கட்சிப் பதவிகள், தொழிற்சங்கப் பதவிகள் போன்ற இன்னபிற பொறுப்பு வகிக்கின்றவர்களுக்கும் இது பொருத்தம்.
சாதாரண நிலையிலுள்ள மனிதர்கள், ஆண்களாயினும், பெண்களாயினும் சரி வாழ்க்கைத்தரம் குறைவானதாகவும், அது தங்கள் தலைவிதி எனவும் நினைத்துக் கொண்டு எவ்வித முயற்சியுமின்றி தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்கின்றனர். இதனை முறியடிக்க அவர்களும் தங்கள் கால்பெருவிரல் ரேகை அமைப்பைப் பார்த்து தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் அது அவர்களை வெற்றிச்சிகரத்தில் கொண்டு போய் நிறுத்தும்.
யார், யார் என்னென்ன தொழில் செய்தால் மேன்மை அடையலாம், அந்தத் தொழில் முறையினை தனித்தோ, கூட்டாகவோ எப்படிச் செய்தால் நலம் பயக்கும், லாபத்தை ஈட்ட முடியும் என்பதையும் கால்பெருவிரல் ரேகை மூலம் அறிய முடியும். பெண்களைப் பொறுத்தவரை வேலைக்குச் செல்வோரும் சரி, வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருப்போரும் சரி பல்வேறு வகையில் மன உலைச்சலை தினம்தோறும் சந்தித்த வண்ணம் உள்ளனர். அதில் சிலர் அந்த மன உலைச்சலைத் தாங்கில் கொள்ள முடியாமல் மன நோயாளிக்களாய் மாரிப்போகின்றனர். சிலர் வெளியே சொல்ல முடியாமல் வேதனையடைகின்றனர் மற்றும் சிலர் கோவில்களுக்கும், மனவளக்கலை மன்றங்களுக்கும் சென்று தற்காலிக நிவாரணம் தேடிக் கொள்கின்றனர். மீண்டும் அது தலை தூக்கும்போது வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து தங்களையே மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவர்கள் அனைவருமே தங்கள் கால்பெருவிரல் ரேகையின் மூலம் தங்கள் உடல் ரீதியான தெய்வங்களைக் கண்டறிந்து அவற்றை வணங்கி வந்தால் அளப்பரிய மாற்றங்கள் ஏற்படும்.
குடும்பங்களைக் கவனிக்காத அல்லது கவனிக்க இயலாத, குறிப்பாக தங்கள் அன்பு மனைவியையும், குழந்தைகளையும் கவனிக்காத கணவன் இருந்தாலும், தங்கள் கணவனையும் குழந்தைகளையும் கவனிக்காமல், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என இருக்கும் மனைவியரானாலும் சரி அவரவர் தங்கள் கால்பெருவிரல் ரேகையின் மூளல் தங்கள் உடல் ரீதியான தெய்வத்தைத் தெரிந்துக்கொண்டு உரித்தான நாளில் வணங்கி வந்தால் மேலே கூறப்பட்டவர்களின் வாழ்க்கை தலைகீழ் மாற்றமாகி எப்போதும் பொறுப்புணர்வுடன் மகிழ்சிகரமான, பொருளாதாரத்தில் பின்னடைவு இல்லாத குடும்ப வாழ்க்கையாக மாறும். ஒவ்வொருவரின் வாழ்கையில், கஷ்டங்கள் சிக்கல்கள் இருந்தால் அவரர் கால்பெருவிரல் ரேகையிலேயே அதற்க்கான மாற்று வழிகள் காண முடியும்.
அடுத்து பூப்பெய்தும் பெண்களின் பருவ வளர்ச்சி, லக்கினப்பலன்கள், இராசிப்பலங்கள்,நட்ச்சத்திரப் பலன்கள், நாள், மாத, திதிப்பலன்கள், 12 ராசியிலும் கிரக நிலை அதனால் ஏற்படும் யோக பலன்கள், ஜாதகப் பொதுப் பலன்கள் முதலானவற்றை மிகத் துல்லியமாக கால்பெருவிரல் ரேகை ஜோதிடத்தில் அறிய முடியும். குறிப்பாக பூப்பெய்திய பெண்களின் பூப்படைந்த நேரத்தை வைத்து, அப்பெண்ணின் கால் பெருவிரல் ரேகையினைக் கணக்கிட்டால், அந்த நேரத்தின் கிரக நிலை, அதனால் அப்பெண்ணிற்கு அமையும் உடற்கூறு, அப்பெண் வளர்க்கப்படும் விதம், அவளது கல்வியறிவு எதனைச் சார்ந்ததாக இருக்கும், உயர்க்கல்வி பெற்று உயர்பதவிகள் அடைவாளா? இல்லையா? அவளுக்கு எத்திசையிலிருந்து எந்தவிதமான கணவன் அமைவான் அவ்வாறு அமையும் கணவனால் வாழ்க்கை துன்பமில்லாமல் கடைசி வரை நிலைக்குமா? என்பனவற்றை தீர்த்தமாக அறிய முடியும்.
|