ஜோதிட சாஷ்திரங்கள் மூலம் அத்தனையும் படம் பிடித்துக் காட்டுகின்ற விசயங்கள் சிறப்பானது. அதில் அப்பெண்ணின் பிறப்பு ஜாதகம், அடுத்து ருது ஜாதகம் இவைகள் பார்க்கபடுகின்றன. அதற்கு மேலான ஒரு மகத்தான, உள்ளங்களால் முதல் உச்சிவரை அப்பெண்ணின் உடற்கூறு சம்பந்தமான, நாம் அனைவரும் வியப்படைகின்ற விசயம் ஒன்று இருக்கிறது.
ஒரு பெண் ருதுவான போது சீர் செய்து வீட்டிற்குள் அழைக்கும் போது அவளது வலது காலினை முதலில் எடுத்து வைத்து வீட்டிற்க்குள் வரச் செய்வார்கள். அன்று வரை அவளைச் சூழ்ந்திருந்த மற்றும் பற்றியிருந்த கேட்ட கிரக நிலைகள், கஷ்டங்கள் அனைத்தும் விலகி விட்டதாகவும் உணர்வு பூர்வமாக அறிவார்கள். வலது காலினை எடுத்து வைக்கும் போது அங்கேயும் கால் கட்டை விரல் தான் முதலில் பதிவாகின்றது. அப்போது தான் அவளது பருவ வளர்ச்சியின் மகிழ்ச்சி வாழ்க்கை ஆரம்பமாகிறது. அவ்வாறு அடி எடுத்து வைக்கும் அனைத்துப் பெண்களின் வாழ்க்கை இனிமையானதாக இருக்குமா? என்றால் சிலருக்கு அமையும் சிலருக்கு அமையாது.
பூப்பெய்திய நாளில் இருந்து சிலருக்கு கஷ்டங்களுக்கு மேல் கஷ்டங்கள் வந்து சேரும். உதாரணமாக ஒரு ஆப்பிள் பலத்தையும், ஒரு நாவல் பழத்தையும் எடுத்துக் கொள்வோம். சிவப்பாக இருக்கும் பெண்ணை ஆப்பிள் பழத்துக்கும், கருப்பாக இருக்கும் பெண்ணை நாவல் பழத்திற்கும் ஒப்பாக வைத்துப் பார்ப்போம். காரணம், பெண்கள் பூப்படைந்த நாள் முதல், காய்களின் நிலையிலிருந்து கனிகளின் நிலைக்கு வருகின்றனர். நாம் பழங்களைத் தேர்வு செய்யும் போது அன்றே பறித்த உருண்டு திரண்ட கனிகளை வாங்குகிறோம். பறித்த நாள்பட்ட வெயிலில் வாடிப்போன பழங்களை நிராகரிக்கிறோம். கனிகள் அந்தந்த வகைக்கேற்ப செவப்பாக இருந்தாலும் சரி கருப்பாக இருந்தாலும் சரி, நல்லவைகளை வாங்குகிறோம் .
அதுபோல தான் பெண்களும், அதனால் தான் பெண் கருப்போ, சிவப்போ, கண்ணுக்கு இலட்சணமாய் இருந்தால் போதும் என பெண்களைத் தேர்ந்தெடுத்து மண வாழ்க்கை அமைத்துக் கொள்வது இன்றளவும் நடைமுறையில் உள்ளது. ஆகா பெண்கள், பூப்பெய்தும் பருவத்திற்கு முன்பாகவே கால் பெருவிரல் ரேகை மூலமாக தங்களின் உடல் கூறு சம்மந்தமான தெய்வத்தைக் கண்டறிந்து வைத்தல் வேண்டும். அப்போது தான் பூப்பெய்திய பின் சீர் செய்து வீட்டிற்குள் அழைக்கும் முன்பாக அத்தெய்வத்தை மட்டும் வணங்கிச் செல்ல ஏதுவாகும். அவ்வாறு வணங்கிய பின் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் பெண்கள் எதிர்கால வாழ்க்கை சிறப்படையும். எவ்விதக் கஷ்டங்களும் குடும்பத்தில் வராது. பெண்களும் சிறப்பாக வளர்க்கபடுவார்கள். உடல் ஆரோக்கியமாக மேற்குறிப்பிட்ட நற்கனிகளைப் போல் அவர்கள் திகழ்வார்கள். நல்ல வரங்களும் அமையும். அதே போல் ஆண் குழந்தைகளின் கால் பெருவிரல் ரேகையினை எடுத்து அவர்கள் உடல் சார்ந்த தெய்வத்தையும், அவனுடைய படிப்பின் அளவு, எந்த நிலையில் வாழ்கையை அமைத்துக் கொள்வான் என்பதையும் முன் கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல் திருமண நிலையிலுள்ள பெண்களும் தங்கள் கால் பெருவிரல் ரேகையினைப் பார்த்து, எப்போது திருமணம் நடக்கும். எந்த மாதிரியான கணவனை அப்பெண் அடைவாள் எவ்வாறு வாழ்க்கை அவளுக்கு அமையும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அவளது உடல்கூறு சன்பந்தமான தெய்வத்தை அறிந்து கொண்டு மண மேடைக்குச் செல்லும் முன் அத்தெய்வத்தை வணங்கிய பின் மங்கல நாணை ஏற்ற்றுக் கொண்டால் அப்பெண்ணின் வாழ்க்கை சிறப்படைவதோடு, எப்போதும் செல்வச் செழிப்புடன் கணவன் குழந்தைகளுடன் சந்தோசமான வாழ்க்கை வாழ்வாள். ஆண்களும் கால் பெருவிரல் ரேகை மூலம் தங்கள் உடற்கூறு சம்பந்தமான தெய்வத்தை அறிந்து மணமேடைக்குச் செல்லும் முன் வணங்கிச் சென்றால் மணப்பெண்ணும் தனக்கு எந்த நிலையில் ஒருமித்த கருத்துடன் குடும்பம் நடத்துவாள் . குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மனமேடைச் செல்லும் . ஆண், பெண் இருவருக்கும் தெய்வம் ஒன்றாகவே இருந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை எப்போதும் வளமைகுன்றாது. சண்டை சச்சரவு இல்லாத வாழ்க்கை அமையும். அதனால் ஊர் போற்ற வாழ்வர். பெருந்தன்மையான குடும்பம் எனப் பெயர் பெறுவர்.
ருதுவான பெண்களும், திருமணத்திற்குத் தயார் நிலையில் உள்ள பெண்களும் அவர்களுடைய கால் பெருவிரல் ரேகை மூலம் அவர்களுடைய உடற்கூறு சம்பந்தமான தெய்வத்தைத் தெரிந்து கொள்ளுதல் மிக முக்கியமானது. தங்கள் உடல் ரீதியான தெய்வம் எது என்பதைத் தெரிந்து கொண்டு வணங்காமல் மற்ற தெய்வங்களை வழிபட்டு கொண்டிருந்தால் கஷ்டங்கள் தொடரும். ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் உடல் ரீதியான தெய்வம் வெவ்வேறாக அமையும். அனைத்துத் தெய்வங்களையும், கோவில் அல்லது வீடுகளில் வழிபட்டாலும் கூட , அவற்றுள் தங்களுக்கே உரித்தான கடவுளை வீட்டில் வைத்து சிறப்பாக வழிபாடு செய்தால் அக்குடும்பம் செழிப்படையும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றியைத்தரும். பெண்கள் சார்ந்த 27 யோகங்களில் அவயோகங்கள் நீங்கி சுபயோகங்களில் வாழும் சூழ்நிலை ஏற்படும்.
குழந்தைகளுக்கு முடி எடுத்து காதணி விழாவை, மக்களின் அனைவரும் ஏதாவது ஒரு கோவிலில் செய்கின்றனர் அல்லது அவரர் குல தெய்வங்களின் கோவில்களில் செய்கின்றனர். அவர்கள் முடிஎடுப்பதும் காதணி விழா கொண்டாடுவதையும் எந்தக் கோவில்களில் வேண்டுமானாலும் செய்யலாம், தவறில்லை. ஆனால் நட்சத்திரப்படி பெயர் சூட்டுவது மட்டும், அக்குழந்தைகளின் கால் பெருவிரல் ரேகையினை எடுத்து அவற்றோடு ஒத்துப் போகின்ற அக்குழந்தையின் உடல் சார்ந்த தெய்வத்தின் கோவிலில் நட்சத்திரம் மாறாது பெயர் சூட்டினால் போதும். ஆண் குழந்தையானாலும் சரி பெண் குழந்தையானாலும் சரி தானாகவே நல்ல முறையில் வளர்ந்து புகழ்ச்சிக்கு செல்லும்.
உத்யோகத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், குழந்தைகள் படிப்பு, வளர்ந்து விட்டபின் வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேறு என படிபடியாக செலவுகள் ஏற்பட்டு கடைசி காலத்தில் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும் அல்லது முதுயோர் இல்லங்களில் தஞ்சம் அடைகின்ற நிலை ஏற்படும். அவர்கள் ஆரம்ப காலங்களிலேயே அதாவது திருமணம் ஆகும் பொழுதோ அல்லது திருமணமாகி வாழ்கையை ஆரம்பிக்கும்போதோ அல்லது வாழ்கையின் பாதிக்& |