ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம் : ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம் இராட்டைசுற்றி பாளையம், அவல்பூந்துறை கிராமம் , ஈரோடு மாவட்டம் , தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது ஈரோடு - பழனி போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீட்டரில் அவல் பூந்துறையில் அமைந்துள்ளது . 1 ஏக்கர் பரப்பளவு இடத்தின் மேற்குப்புறம் ஈரோடு- பழனிதார்ச்சாலை ஆலயம் அமையப் போகும் இடத்தைச் சுற்றி வடக்குப் புறத்தில் இருந்து கிழக்குப் புறம் ஓடும் நீரோடை , தெற்குப் புறத்தில் ஸ்ரீ பைரவா அறகட்டளை சார்பில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனை , அனாதைகள் காப்பகம் ,முதியோர் இல்லம் ,ஊனமுற்றோர் காப்பகம் அமைந்துள்ளது.
ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் : மற்றொரு வரலாறும் பைரவர் பற்றிக் கூறப்படுகின்றது . சம்பாகரனை வதம் செய்வதற்காக கஷ்டித்திதி அன்று சிவபெருமானின் மூர்த்தமாக, ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் அவதரித்து அவனை வதம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் தான் சம்பா சஷ்டி என்பது பைரவருக்காக விழாவாக ஒரு ஆலயத்தில் கொண்டாடப்படுகிறது .
ஆலயம்:
ஆலயம் என்பதற்கு எல்லா உயிர்களும் லயம் அடையும் இடம் என்று பொருள். எல்லோரும் ஒன்று கூடி இறைவனை வணங்குவதற்குரிய இடம். ஆ என்பது பசு. இது ஜீவர்களை குறிக்கின்றது. லயம் - ஒடுக்கம். ஜீவர்களை தமது ஆணவ மாயையிலிருந்து விலகி இறைவனிடம் ஒடுங்குவதற்குரிய இடமே ஆலயமாகும். இத்தகைய இடத்தில் ஐம்பூதங்களின் வடிவமாக அதனை அடக்கி ஆள்பவராக உள்ள வடிவங்களை குறிக்கும் வகையில் இறைவனின் திருமேனி கல்லினால் செய்யப்படுகிறது. கல்லிலே காற்று உள்ளது. கல்லிலே நிலம் (மண்) உள்ளது. கல்லிலே வெளி அதாவது ஆகாயம் உள்ளது. எனவே தான் நம் முன்னோர்கள் சிலைகளை வடிக்க கல்லை பயன்படுத்தினர். கல்லிலே நீர் உள்ளது.கல்லிலேயே அக்னி உள்ளது. கோயில் என்பது நமது உடம்பினை ஒத்ததாக உள்ளதை திருமூலர் திருமந்திரத்தில் உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் கூள்ளற் பிராணார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத்தெளிந்தோர்க்கு ஜீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைந்தும் காணா மணி விளக்கே கோபுர தரிசனம் பாப விமோசனம், கோபுர தரிசனம் என்பது கோடி புண்ணியம் என்று கூறியதால் தான் வானளாவிய கோபுரங்களை முன்பு கட்டி வைத்தனர்.ஆலயம் என்பது மனித உடலாக கொண்டால் கர்ப்ப கிரகம் - உடம்பின் தலை அந்தராளம் - கழுத்து அர்த்த மண்டபம் - மார்பு மகாமண்டபம் - வயிறு உள்காற்று - தோல்கள் வெளிக்காற்று - கைகள் மூர்த்தம் - ஆன்மா கருவறை தூண்கள் - கண்கள் சுவர் கற்கள் - எலும்புகள் தூண்கள் - நரம்புகள்.
நாம் வாழும் இல்லத்திற்கு வருடம் ஒரு முறை பொங்கலுக்கு வெள்ளை அடித்து சுத்தம் செய்து பாதுகாத்து வருகிறோம். அது போல இறைவன் வாழும் இடமாகிய ஆலயம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து சாந்தி செய்து கும்பாபிஷேகம் செய்வது வழக்கமாகும்.புதிதாக கட்டப்பட்ட கோயிலுக்கு குடமுழுக்கு செய்வது என்பது அனாவர்த்தனம் என்றும், நீண்ட காலமாக பூஜை செய்யப்படாமல் சீர் குலைந்து இருந்தால் அதனை செப்பனிட்டு நிகழ்த்தப்படுவதற்க்கு குடமுழுக்கு ஆவர்த்தனம் என்றும், ஆலயம் முழுமையாக சிதைந்தோ, பிளவு படவோ, அஷ்டபந்தனம் சிதைந்து இருந்தாலோ பாலாலயம் செய்து எல்லாவற்றையும் சரி செய்து குடமுழுக்கு செய்வது புனராவர்த்தனம் என்றும் கூறுவது மரபு. ஆகம சாஸ்திரப்படியும், ஆலயத்தின் முறைப்படியும் வெகுநாட்களாக பூஜை நடைபெறாவிடில் சிவபெருமான் லிங்கத்தை விட்டு விமானத்திற்கு வந்து மூன்று வருடங்கள் வரையிலும் யாவருக்கும் அருட்பாளித்து கொண்டிருப்பதாகவும், பன்னிரண்டு வருடத்திற்கு தல விருஷத்தில் இருந்து அனுகிரகம் செய்வதாகவும்,அதற்கும் மேற்பட்டால் தல விருஷத்திலிருந்து நீங்கி சூரிய மண்டலத்திலிருந்து அருள் பாலிப்பதாகவும் ஐதீகம். ஆகவே இறைவன் நம்முடனேயே வைத்திருக்க ஆலய கும்பாபிஷேகம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாது செய்யப்பட வேண்டும்.
தோன்றி ஒடுங்கும் தன்மை உடையது உலகம். எவற்றிலிருந்து எவ்வாறு தொடங்குகிறதோ அங்ஙனமே இறுதியில் ஒடுக்கம் கொள்கிறது.


|